Categories
சினிமா தமிழ் சினிமா

பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி …. காதலனை அறிமுகப்படுத்திய அமலாபால்..!!

முன்னணி நடிகையான அமலாபால் வாட்ச் விளம்பரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். 

தமிழ்சினிமாவில் ஆரம்பத்திலிருந்தே ஒரு சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலாபால். இவர் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு வந்தார். அதன்பின்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபல டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர். விஜயை திருமணம் செய்து கொண்ட இவரின் திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுக்குள் முடிவுக்கு வந்தது. முறையாக விவாகரத்து வாங்கி தங்களின் கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். தற்போது அமலாபாலின் முன்னாள் கணவர் விஜய்க்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் அமலாபாலும் தொடர்ந்து காதல், கல்யாணம் என கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார். ஆனால் அது நிஜமல்ல என்பதால் இதைப் பற்றி பெரிதும் அலட்டி கொள்ளாமல் தனது கேரியரில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் அமலாபால். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அமலாபால் தன் காதலர் டானியல் வெல்லிங்டன் என குறிப்பிட்டு வாட்ச் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை  பகிர்ந்துள்ளார். அழகாக காட்சியளிக்கும் இந்த அமலாபாலை அனைவரும் ரசித்து கமென்ட் செய்து அமலாபாலின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |