Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்…. அமைச்சர் துரைமுருகன் விளாசல்….!!!!

சேலத்தில் உள்ள மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால்  அணையின் பாதுகாப்பு மற்றும் நீர் வரத்து குறித்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அணையின் நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, மேட்டூர் அணை உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் தேர்தல் நேரத்தில் அவசரமாக தொடங்கப்பட்டு அரைகுறையாக விட்டதால் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் செல்கிறது.

இதனை திமுக ஆட்சி முழுமையாக நிறைவேற்றும். மேலும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட பின்னர் உபரிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எம்.ஜி.ஆர் காலத்திலேயே உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டனர். அதனால் முல்லைப் பெரியாறு அணையை வளப்படுத்த திமுக அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. மேலும் கேரளா, கர்நாடகம் தமிழகத்தின் நீராதாரங்களை பாதிக்கும் எந்த புதிய அணையும் கட்டுவதற்கு திமுக மற்றும் அதிமுகவினர் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து பல்வேறு ஏரிகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Categories

Tech |