Categories
கிரிக்கெட் விளையாட்டு

முக்கியமான இடத்தில் கேட்சுகளை தவறி விட்டுடோம் …! தோனி கருத்து …!!!

பவுலர்களுக்கு சவால் விடும் வகையில் , டெல்லி பிட்ச் இருந்ததாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற 27 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பரபரப்பான இறுதிகட்டத்தில் ,மும்பை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. சென்னை அணி 2  தோல்விகளை  சந்தித்தாலும் , தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

போட்டியில் தோல்வி குறித்து கேப்டன் தோனி கூறும்போது, இந்த டெல்லி ஆடுகளம் விளையாடுவதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது. குறிப்பாக பவுலர்களுக்கு சவால் விடும் வகையில் பிட்ச் காணப்பட்டது. இதனால் முக்கியமாக இடங்களில் ,கேட்சுகளை தவறிவிட்டோம். இதனால் இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் , நாங்கள் துவண்டு போவதில்லை என்றும், இதிலிருந்து சில விஷயங்களை வீரர்கள் தெரிந்து கொண்டு இருப்பார்கள் என்று  கேப்டன் தோனி கூறினார்.

Categories

Tech |