சாலையில் முகககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையில் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இதனையடுத்து காவல் நிலையம் அருகாமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் மற்றும் அலுவலர்கள் அவ்வழியில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.