டீன் ஏஜினருக்கு முகப்பருக்கள் ஒரு முடிவில்லா பிரச்சனையாக இருக்கிறது. பல்வேறு வகையான சோப்புகளையும், க்ரீம்களையும், பயன்படுத்தினாலும் கூட இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
மனஉளைச்சலும், தாழ்வுமனப்பான்மையும், நம்மை தாக்குகிறது. வெளியில் செல்லும் போதும், பொது நிகழ்ச்சிகள், விேசஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் போதும் முகப்பருவால் நாம் சங்கடத்திற்கு உள்ளாகிறோம்.
முகத்தில் உள்ள சில பருக்கள் வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். அந்த பருக்கள் மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுத்து விடுகிறது. நமது சருமத்தில் அடியில் காணப்படும், செபேசியஸ் எண்ணெய் சுரப்பிகள் போன்ற வழுவழுப்பான திரவத்தைச் சுரக்கிறது.
இவற்றை சீபம் என்று சொல்லுவார்கள், நமது உடல் முழுவது இந்த சுரப்பி காணப்பட்டாலும், இந்தத் திரவம் முகத்தில் கன்னம், மூக்கு, நெற்றி ஆகிய பகுதிகளில் தான் அதிகமாகச் சுரக்கும்.
சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக்கொள்ளும். சருமம் வறட்சி அடையாமலும் பாதுகாக்கும்; பளபளப்பான, மென்மையான தோற்றத்தை தரும். முகத்தசைகள் சுருங்கி விரியவும் இந்த சுரப்பிகள் உதவுகின்றது.
. பருவ வயதில் ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரக்கத் தொடங்குகிறது. சிலருக்கு ஆண்ட்ரோஜன் சுரப்பி அதிகரிக்கும்பொழுது, அது சீபத்தையும் அதிகமாகச் சுரக்க செய்யும்.
. இதனால் முகத்தில் எண்ணெய் பசை அதிகரிக்கும், பருக்களும் உருவாகும். காற்றில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தூசுக்கள் பருக்களில் ஒட்டிக்கொள்ளும் போது, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சீழ் பிடிக்கும்.