Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பு விழிப்புணர்வு” முகக்கவசம் அணியாமல் போகாதீங்க…. அபராதம் எவ்வளவு தெரியுமா….?

கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணியாமல் வருபவருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருவாய்த்துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறையினர் ஒன்றாக இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இட்டமொழியில் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சாலையில் முக கவசம் அணியாமல் சென்றார். அப்போது அவருக்கு  200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, முக கவசம் வழங்கப்பட்டது. அதன்பின்பு அந்த பகுதியில் முக கவசம் அணியாமல் வரும் அனைவரிடமும் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Categories

Tech |