Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அடடே..! அரிசி கழுவிய தண்ணீருக்கு இவ்வளவு பவரா…!!

உணவிற்கே மிக முக்கியமானது அரிசி. அவற்றை கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகுபடுத்த பயன்படுத்தலாம்…!!

1. அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு முடியை சுத்தம் செய்தால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

2. இந்த அரிசி கழுவிய தண்ணீரில் ஏராளமான வைட்டமின், மினரல்ஸ்,அமினோ அசிட்  இருப்பதாக தெரியவந்துள்ளது.

3. அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை பாதுகாக்கும் சத்துகள் இருக்கின்றன அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுக்கும். தளர்ந்து இருக்கும் சருமத்தை சரி செய்து விடும். இதனை தினமும் முகத்திற்கு பயன் படுத்தலாம்.

4. சிறிய பஞ்சி அல்லது துணியிலோ அரிசி கழுவிய நீரில் முக்கி எடுத்து முகத்தை துடைக்கவேண்டும். சிறிது நேரத்தில் தானாக காய்ந்துவிடும், கழுவ வேண்டாம் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தில் வினைபுரிந்து சருமத்தில் இருக்கும் பல தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும்.

5. வெயிலில் அதிகமாக சுற்றுபவர்களுக்கு சருமம் வரண்டு விரைவிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க அரசி கழுவிய நீரில் முகம் கழுவினால் முகம் இளமையாக தோற்றம் அளிக்கும்.

6. கூந்தல் அதிக வறட்சியுடன் இருந்தால், அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசினால் கூந்தலின் மென்மைத் தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் உண்மையான நிறமும் பாதுகாக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

7. தலை முடிக்கு கண்டிஷனர் போடுவதற்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம். ஷாம்பூ சீயக்காய் என்று எதை தேய்த்து தலைக்கு குளித்தாலும் கடைசியாக அரிசி கழுவிய நீரை தலைக்கு ஊற்றிக் கொண்டால் கூட போதும்.

8. அரிசி கழுவிய தண்ணீருடன் இன்னும் கொஞ்சம் சாதாரண தண்ணீரைச் சேர்த்து குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு சரும நோய்கள் வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்.

9. எனவே அரிசியை சுத்தமான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக இரண்டு முறை கழுவ வேண்டும். பின்னர் இந்த தண்ணீரை இங்கே சொன்னது போன்று பயன்படுத்தி வந்தால், இதில் உள்ள சக்திகள் சரும செல்களுக்கு கிடைத்து முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு சருமமும் பொலிவு பெறும். கூந்தலும் செழித்து வளரும்.

ஆகையால் நம் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு பெரிதும் துணை நிற்கும். இந்த அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் இது போன்று பயன்படுத்தி அதன் நன்மைகளை பெற்றிடலாம்.

Categories

Tech |