Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“திருமண பத்திரிக்கையில் பெயர் போடவில்லை” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி சுப்பிரமணியின் தம்பி மகன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணப் பத்திரிகையில் பெயர் போடாததால் சுப்பிரமணியன் விரக்தியடைந்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சுப்பிரமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சுப்பிரமணியனை மீட்டு ஆரணி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சுப்பிரமணியனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |