Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த மனைவி… பற்றி எரிந்த வீடு… கணவனை கைது செய்த காவல்துறையினர்…!!

மது குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் தொழிலாளி தனது வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரிப்பட்டி பகுதியில் தொழிலாளியான குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது மனைவியான பழனியம்மாளிடம் மது குடிப்பதற்கு பணம் தர வேண்டும் என்று கேட்டபோது அதற்கு அவர்  தன்னிடம் பணம் இல்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனால் கோபம் அடைந்த குமார் திடீரென தனது வீட்டிற்கு அவரே தீ வைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு திரும்பிய பழனியம்மாள் வீடு தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பற்றி எரிந்த  தீயை அணைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது குடிசை வீடு என்பதால் தீயானது மளமளவென்று பற்றி எரிந்து முழுவதும் நாசமாகி விட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இதுபற்றி நடத்திய விசாரணையில் மது குடிக்க பணம் தர மறுத்ததால் குமார்தான் இவ்வாறு தீ வைத்தார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |