Categories
உலக செய்திகள்

இலங்கை அழகியின் பட்டம் பறிப்பு… மேடையில் பரபரப்பு… என்ன காரணம்…?

மோசடி புகார் காரணமாக இலங்கையைச் சேர்ந்த அழகியின் பட்டம் பறிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் கொழும்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி அன்று திருமதி ஸ்ரீலங்கா போட்டி நடந்தது. இதில் புஷ்பிகா டி சில்வா என்பவர் திருமதி ஸ்ரீலங்கா என்ற பட்டத்தை வென்றார். ஆனால் மேடையில் அவரின் கிரீடத்தை முன்னாள் வெற்றியாளரான கரோலின் ஜூலி  பறித்துவிட்டார். அவர் நியாயமில்லாமல் வெற்றி பெற்றுவிட்டார் என்று கரோலின் புகார் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த இந்த வருடத்திற்கான திருமதி வேர்ல்டு அழகி போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த ஷைலின் போர்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் புஷ்பிகா  டி தன் இணையதள பக்கத்தில், “கடந்த மாதம் லாஸ் வேகாஸில் நடந்த திருமதி வேர்ல்ட் போட்டியில் நடுவர்கள் தேவையின்றி செல்வாக்கு செலுத்தி, தன்னை வெற்றி பெறவிடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், இதில் நடுவர்கள் முறைகேடு செய்தனர். அதனால்தான் நான் வெற்றி பெறவில்லை  என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், புஷ்பிகா டி சில்வாவின் “திருமதி இலங்கை” பட்டம் பறிக்கபட்டிருப்பதாகவும், அவர் எந்த விளம்பர நடவடிக்கைகளிலும் பட்டத்தை பயன்படுத்த கூடாது என்றும் போட்டி அமைப்பாளர்கள் தடை விதித்திருக்கிறார்கள்.
டி சில்வா, தான் சட்டப்பூர்வமாக திருமணம் செய்திருக்கிறேன். ஆனால் கணவரிடமிருந்து பிரிந்துவிட்டேன் என்று கூறியிருந்தார். எனினும், அவர் விவாகரத்து பெற்ற காரணத்தால் அவருக்கு பட்டம் பெற தகுதியில்லை என்று கூறி அவரின் பட்டம் பறிக்கப்பட்டுவிட்டது என போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
புஷ்பிகா டி சில்வா, ‘திருமதி இலங்கை’ பட்டத்தை பெற்ற போதே மேடையில், அவரின்  கிரீடத்தை கரோலின் பறித்துவிட்டார். இந்நிலையில், மீண்டும் அவரிடமிருந்து பட்டம் பறிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |