Categories
அரசியல் தேசிய செய்திகள்

மிஸ்டர் பிரதமர் ”என்னை நம்புங்கள்” பொருளாதாரம் மந்த நிலை … ராகுல் ட்வீட் …!!

மிஸ்டர் பிரதமர் பொருளாதார ரெயில் தடம் புரண்டுள்ளது, என்னை நம்புங்கள் பொருளாதரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்கிறது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவையில் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அசுரத்தனமான வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. மேலும் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

மிஸ்டர் பிரதமர் பொருளாதார ரெயில் தடம் புரண்டுள்ளது -ராகுல்காந்தி டுவீட்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்_டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதில் இந்திய பொருளாதாரத்தை விமர்சித்துள்ளார். இதில் , மிஸ்டர் பிரதமர் பொருளாதார ரெயில் தடம் புரண்டுள்ளது. சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் எதுவும் இல்லை.  வெளிச்சம் இருப்பதாக உங்கள் திறமையற்ற மத்திய நிதி அமைச்சர் சொன்னார். ஆனால் என்னை நம்புங்கள் பொருளாதரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |