Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”MPக்கள் சஸ்பெண்ட்டை திரும்ப பெறுங்கள்” முக.ஸ்டாலின் ட்வீட் …!!

காங்கிரஸ் எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான  கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆனால் மக்களவை, மாநிலங்களவையில் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் இருந்த ரமாதேவி முன்பு ஆவணத்தை கிழித்தெறிந்தார்கள்.

இது மக்களவை மரபுக்கு எதிரானது என்று காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்.பியும் அடங்குவார். சபாநாயகர் ஓம் பிர்லாவின் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா திரும்பப் பெற வேண்டும். டெல்லி வன்முறை பற்றி விவாதம் எழுப்ப முயன்ற 7 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்தின் ஆலயம் நாடாளுமன்றம் எனக் கூறப்படுவதை பாஜக நினைவில் கொள்வது நல்லது என ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.

Categories

Tech |