கென்யா நாட்டில் நாடாளுமன்றத்தில் பிற எம்பிக்களுக்கு இனிப்பு கொடுத்த பெண் எம்பி-யை சபாநாயகர் இடைநீக்கம் செய்திருக்கிறார்.
கென்யாவில் இருக்கும் நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அன்று சர்ச்சையான விவாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில், பெண் எம்.பி. பாத்திமா கெடி, பிற எம்.பி.க்களுக்கு மிட்டாய் கொடுத்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பில் அவர் கூறியதாவது, அதிக நேரமாக விவாதம் நடைபெற்றது.
எனவே, எம்.பி.க்களின் சர்க்கரை அளவு குறைந்தது. அதனால் தான், அவர்களுக்கு இனிப்பு கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார். எனினும், சபாநாயகர் அதனை ஏற்க மறுத்து ஒரு நாள் பணியிடை நீக்கம் செய்வதாக உத்தரவிட்டிருக்கிறார். இதனிடையே, பாத்திமா கெடி, அவரின் வீட்டின் மாடியில் வைத்து லஞ்சம் விநியோகித்ததாக என்திண்டி நியோரோ என்ற எம்.பி. குற்றம் சாட்டினார்.
எனவே, சபாநாயகர் அவர் லஞ்சம் விநியோகித்ததை நிரூபியுங்கள் என்று என்திண்டிக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அவரால் நிரூபிக்க முடியவில்லை. எனவே அவரையும் 2 நாட்கள் இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் உத்தரவிட்டிருக்கிறார்.