இலங்கை எம்.பி. சிறீதரன் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் கேட்டு கொண்டுள்ளார்.
பாகிஸ்தான், சீனா நிறுவனங்கள் யாழ்ப்பாணம் தீவுப்பகுதிகளை நோக்கி அடியெடுத்து வைப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. சிறீதரன் உரையாடலின் போது குற்றம் சாட்டியுள்ளார். சீனாவுக்கு நெடுந்தீவில் 80 ஏக்கர், சீனாவின் புதிய நட்சத்திர விடுதியினை யாழ் பழைய கச்சேரியில் அமைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் எம்.பி. சிறீதரன் பாகிஸ்தான் தூதுவர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து அல்லைப்பிட்டி, மண்டைத்தீவு பகுதிகளை பார்வையிட்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், தமிழ் மக்களுக்கு இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பெரும் இன்னலை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் ஈழத்தமிழர்கள் தனது தொப்புள் கொடி உறவான இந்தியாவுடன் தான் நிற்பார்கள் என்று உறுதியாக கூறியுள்ளார்.