நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை தனிநபர்களின் நடமாட்டம் கண்டிப்பாக தடைசெய்யப்படும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை தனிநபர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய நோக்கம் என்னவென்றால் இரவு நேரங்களில் மக்கள் ஒன்றாக கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை உறுதி செய்வதற்கும் ஆகும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இரவு நேரங்களில் (இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை) நெடுஞ்சாலைகளில் செல்லும் நபர்கள் மற்றும் வாகனங்களின் இயக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார்.