Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தவனம்பாளையம் பகுதியில் விவசாயியான ஆ.துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை துரைசாமி நந்தவனம்பாளையத்தில் இருந்து ஜல்லிப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று துரைசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த துரைசாமியை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் துரைசாமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி துரைசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொண்ட குண்டடம் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய வாகனம் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |