நடிகை கீர்த்தி சுரேஷ் மொட்டை மாடியில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா ,விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது இவர் நடிகர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் சாணிக் காயிதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சர்க்காரு வாரி பட்டா , ரங் டே ஆகிய தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
🦋💙
📸- @tarunkoliyot @shravyavarma #HomeShoot #ShootDiaries #GoingCasualWithKeerthy pic.twitter.com/DDkD05WPqc
— Keerthy Suresh (@KeerthyOfficial) March 7, 2021
மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மரைக்காயர் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மொட்டை மாடியில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர் ரசிகர்கள் .