மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ Z 3 மற்றும் Z 3 பிளே ஸ்மார்ட்போன்களை மோட்டோ மாட்ஸ் வசதியுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. மோட்டோ Z 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் பற்றிய பல விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மோட்டோ Z 4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி பல விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி மோட்டோ Z 4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டா-கோர் பிராசஸருடன் வரும் என்றும், மோட்டோ மாட்ஸ் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இத்துடன் மோட்டோ Z 4 மாடலில் மோட்டோரோலாவின் 5G மாட் மூலம் 5G சேவையை பயன்படுத்தும் வசதி வழங்க போவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. தரத்தில் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க மோட்டோ Z 4 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இது குவாட் பிக்சல் தொழில்நுட்பத்தில் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒரு பெரிய பிக்சலில் புகைப்படங்களை 12 MP தரத்தில் வழங்கும் என கூறப்படுகிறது. முன்பக்கம் 25 MP செல்ஃபி கேமரா மற்றும் குரூப் செல்ஃபி மோட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றுடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. மோட், நைட் விஷன் மோட், 6MP போட்டோஸ் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும் என கூறப்படுகிறது. இவற்றை சக்தியூட்ட 3600 MAH பேட்டரி மற்றும் டர்போ சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம். புதிய ஸ்மார்ட்போனிலும் மோட்டோரோலா 3.5 MM ஆடியோ ஜாக், ஸ்பிளாஷ் ப்ரூஃப் கொண்ட நானோ கோட்டிங் உள்ளிட்டவற்றை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ Z 4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு வெர்சன் 9 பை கொண்டிருக்கும் என்றும் இத்துடன் கூகுளின் டிஜிட்டல் வெல்பீயிங் மற்றும் லென்ஸ் சேவைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி மோட்டோ டிஸ்ப்ளே, மோட்டோ ஆக்ஷன்ஸ், மோட்டோ எக்ஸ்பீரியன்சஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.