Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மோட்டர் சைக்கிள்கள் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… தர்மபுரியில் பரபரப்பு…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொள்ளுப்பட்டி பகுதியில் கஸ்தூரி ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி ராஜனுடன் அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்களான வெற்றி செல்வன் மற்றும் சச்சின் போன்றோர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அதே பகுதியில் தாரமங்கலத்தில் வசிக்கும் அரவிந்தன் என்ற கல்லூரி மாணவர் தனது பாட்டி சந்திரா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நில்சியில் ஜெவீரஅள்ளி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது இவர்களது  மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அரவிந்த், கஸ்தூரி ராஜா, சந்திரா போன்றோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த சச்சின் வெற்றி செல்வன் போன்றோரை  மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |