Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக “மோதிலால் வோரா_வுக்கு” வாய்ப்பு…!!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மோதிலால் வோரா தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்பை ராஜினாமா செய்தார்கள். ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நிராகரித்ததோடு அவரின் ராஜினாமாவை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்தினர்.மேலும் காங்கிரஸ் கட்சியின் முதலமைசர்கள் ராகுல் காந்தி _யிடம் ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தினர்.

Image result for மோதிலால் வோரா

இந்நிலையில்  ராஜினாமா_வில் உறுதியாக இருந்த ராகுல் காந்தி ராஜினாமா செய்ததற்கான விரிவான காரணங்களை உள்ளடக்கி அறிக்கை ஒன்றை வெளிட்டார். மேலும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக 90 வயதான மோதிலால் வோரா_வை நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. மூத்த தலைவரான மோதிலால் வோரா மத்திய பிரதேச முதல்வராக இருமுறை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |