Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாவான ”ரோஜா” சீரியல் நடிகை……. புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு……!!!

‘ரோஜா’ சீரியல் நடிகை ஷாமிலி பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் ஒன்று ”ரோஜா”. டி.ஆர்.பி யில் முன்னிலை வகித்து வரும் இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாக நடிக்க, ப்ரியங்கா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனையடுத்து, இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷாமிலி.

Sun TV Roja Serial, Shamili Sukumar - சன் டிவி ரோஜா சீரியல் வில்லி ஷாமிலி  சுகுமார்.

சமீபத்தில், இவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகினார். இந்நிலையில், இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CXU977mvrC8/

Categories

Tech |