மாமியாரின் சடலத்தை மருமகள் தனது சொந்த வீட்டில் வைக்க மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசிப்பவர் மீனாம்பாள்(65). இவருடைய மகன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததால் இவருடைய மருமகள் லதா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் மாமியார் மருமகள் இடையே சண்டை இருந்ததால் மீனாம்பாள் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த மீனாம்பாள் தனது இளைய மகள் விமலாவின் வீட்டிற்கு சென்றிருந்துள்ளார். அந்த நேரத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அங்கேயே இறந்துள்ளார்.
இதையடுத்து அவருடைய உறவினர்கள் அறந்தாங்கியில் உள்ள அவருடைய சொந்த வீடான மருமகள் இருக்கும் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். ஆனால் அவருடைய உடலை லதா வீட்டிற்கு கொண்டுவர மறுத்துள்ளார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் சம்மதத்தின் பேரில் அங்கு வைத்து மீனாம்பாளுக்கு இறுதிசடங்கு நடந்துள்ளது. பின்னர் மீனாம்பாள் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.