குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பது குறித்த ஒரு சிறிய தகவலை இந்த செய்தித்தொகுப்பில் காண்போம்.
பிறந்த குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் கொடுப்பது என்பது தாயின் அடிப்படை மற்றும் முக்கியமான கடமையாகும். இதை செய்ய தவறினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட நேரிடும். தற்போது நவீன மயமாக்கப்பட்ட இந்த உலகில் வீட்டில் ஆண் மட்டும் அல்லாமல், பெண்ணும் வேலைக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வேலைக்கு செல்லும் தாய்மார்கள் வெளியே வைத்து தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழ்நிலை என்பது ஏற்படும்.
எனவே வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும் சரி, வெளி ஊர்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் ஆக இருந்தாலும் சரி பிரெஸ்ட் பம்ப் முறை மூலம் தாய்ப்பாலை சேகரித்து தங்களது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சேகரித்த தாய்ப்பாலை அறையின் வெப்பநிலையில் 8 மணி நேரமும், ஃப்ரிட்ஜில் 24 மணி நேரமும் வைத்திருந்து தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்ஜில் வைத்திருந்த பாலை அதிலிருந்து வெளியே எடுத்து அரை மணி நேரம் கழித்துதான் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் எனவும் கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது.