ஈகுவடாரிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
ஈகுவடார் நாட்டில் குயாஸ் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள சிறையில் அதிகபடியான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆகையினால் அந்த சிறையிலுள்ள கைதிகளுக்கிடையே அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்க ஈகுவடார் அரசாங்கம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது குயாஸ் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள் உட்பட சுமார் 2,000 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய ஈகுவடார் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.