Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் சேங்கனூர் ஆற்றங்கரை தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல் என்ற மகன் இருந்தார். இதில் தொழிலாளியான முத்துவேலுக்கு சுபா என்ற மனைவி இருக்கிறார். இவர்களில் முத்துவேல் சேங்கனூரில் இருந்து வெள்ளமண்டபம் என்ற இடத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இந்நிலையில் சேங்கனூர் ஆத்தங்கரை தெருவைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரும், விழிதியூர் சாலை தெருவைச் சேர்ந்த பிரசன்னா என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சேங்கனூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் வெள்ளமண்டபம் என்ற இடத்தில் எதிரே முத்துவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் பலத்த காயமடைந்த முத்துவேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த பாஸ்கர் மற்றும் பிரசன்னா ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துவேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |