Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார்சைக்கிளில் வைத்த பணம்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 50 யிரம் ரூபாய் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி அண்ணா நகர் முதல் தெருவில் மொபின் ஜாக்சன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் காரியாபட்டியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு அவருடைய மோட்டார் சைக்கிளில் வைத்து பூட்டிவிட்டு, பேருந்து நிலையம அருகில் காய்கறி வாங்க சென்றுள்ளார்.

இதனையடுத்து மொபின் ஜாக்சன் மீண்டும் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் திருட்டு போனது குறித்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மொபின் ஜாக்சன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |