மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் ஊராட்சி ரயில்வே சாலை பகுதியில் மதன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மின்னூரில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென மதன்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதனால் பலத்தகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதன்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.