உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுளில் அதிக அளவில் தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள் குறித்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அந்த லிஸ்டின் படி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்திருந்தது.
அதன் பிறகு 2-ம் இடத்தில் கேஜிஎப் திரைப்படமும், 3-ம் இடத்தில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும், 4-ம் இடத்தில் ஆர்ஆர்ஆர் படமும், 5-ம் இடத்தில் காந்தாரா படமும், 6-ம் இடத்தில் புஷ்பா படமும், 7-ம் இடத்தில் விக்ரம் படமும், 8-ம் இடத்தில் லால் சிங் தத்தா திரைப்படமும், 9-ம் இடத்தில் திருஷ்யம் 2 படமும், 10-ம் இடத்தில் தோர் லவ் அண்ட் தண்டர் திரைப்படமும் இருக்கிறது. இந்த லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மேலும் லால் சிங் தத்தா திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் அந்த படமும் லிஸ்டில் இடம் பெற்றிருப்பது சற்று வியப்பாக தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.