உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில், ரஷ்யா தற்போது வரை உபயோகிக்கப்படாத அதிக தொலைவு குண்டுவீச்சு ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர்தொடுக்க தொடங்கி 50 நாட்களை தாண்டிவிட்டது. இந்நிலையில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் கிழக்குப்பகுதிகளை நோக்கி அதிகமான படைகளை திசை திருப்பியுள்ளது. இதற்கிடையில், ரஷ்ய நாட்டின் அதிபயங்கரமான ஏவுகணை தாங்கிய மாஸ்க்வா போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்த போர் கப்பலிலிருந்த வெடிமருந்து வெடித்ததால் தான் கப்பல் சேதமடைந்திருக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. இந்நிலையில், அந்த கப்பலை துறைமுகத்திற்கு எடுத்து செல்லும் வழியில் சூறாவளியில் கடலுக்குள் மூழ்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது வரை இதற்கு சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. இதுப்பற்றி உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யா தங்கள் நாட்டில் போரை ஆரம்பித்ததிலிருந்து பயன்படுத்தாத அதி பயங்கரமான அதிக தொலைவு குண்டு வீச்சு ஏவுகணைகளை பயன்படுத்தி மரியுபோல் நகரை தாக்கியுள்ளதாக கூறியிருக்கிறார்.