ஆப்கானிஸ்தானில் எதிர்பாராதவிதமாக மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் Spin Ghar மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் எதிர்பாராதவிதமாக குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்ததாகவும், மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் தொடர் தாக்குதல் காரணமாக Nangarhar மாகாணத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தலிபான் அதிகாரிகள், வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என்பதால் spin Ghar மாகாணத்தில் உள்ள மசூதிக்குள் திட்டமிட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.