ஆஸ்திரேலியாவில் மோசடியில் ஈடுபட்ட பெண் காவல்துறையினரிடம் தப்பிக்க தனது கால்களை வெட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பல பேரிடம் மோசடி செய்து அவர்களின் பணத்தை பறித்துச் சென்ற மெலிசா கேடிக் எனும் பெண் கடந்த வருடம் நவம்பர் மாதம் 12-ஆம் தேதி நியூ சவுத் வேல்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்து காணாமல் போனார். இதில் மெலிசா கேடிக் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருக்கிறது. அதாவது மெலிசா கேடிக் பல பேரிடம் தொழில் தொடர்பாக பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதால் பணக்காரியாக வாழ்ந்து வந்தார். இதனால் விலையுயர்ந்த ஆடைகள், சொகுசு வீடுகள் மற்றும் கார்கள் என ஆடம்பரமான வாழ்க்கையை அவர் வாழ்ந்துள்ளார்.
அதன்பின் ஒரு கட்டத்தில் மெலிசா கேடிக் மோசடி செயல்கள் காவல்துறையினருக்கு தெரியவந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் மெலிசா கேடிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவர் கணவர் ஆண்டனி கூறுகிறார். இதற்கிடையில் மெலிசா கேடிக்கின் வெட்டப்பட்ட கால்களை காவல்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு கடற்கரை ஓரத்தில் இருந்து கைப்பற்றினர். ஆகவே மெலிசாக கேடிக்கே தனது கால்களை வெட்டி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இவ்வாறு செய்தால் காவல்துறையினர் தான் இறந்துவிட்டதாகக் கருதி வழக்கை முடித்து விடுவார்கள் என்பதால் மெலிசா கேடிக் இந்த செயலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்டனி கூறியபோது “தன் மனைவி கால்களை வெட்டிக்கொள்ளும் நபராக நான் பார்க்கவில்லை. எனவே மெலிசா கேடிக்கை யாராவது கொலை செய்து இருக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார். இவ்வாறு மெலிசா கேடிக்கின் இந்த மோசடியில் அவர் குடும்பத்தினருக்கு எந்த ஒரு தொடர்பும் இருப்பதாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.