நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிகள் 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக உருமாற்றமடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளும் தென் ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு விமானங்கள் தரையிறங்கியுள்ளது.
அந்த விமானங்களில் பயணித்த 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நெதர்லாந்து நிர்வாகம் “ஒமிக்ரான்” மாறுபாடு தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.