Categories
தேசிய செய்திகள்

“200க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்”…. அமித்ஷா…!!

அசாமில் முதல் கட்டமாக 47 தொகுதிகளும், மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மேற்குவங்காளம் மற்றும் அசாம் மாநிலங்கள்   முழுவதும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அசாம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் மொத்தமாக  294 தொகுதிகள் இருக்கின்றன. அதில் முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. அதேபோல் அசாமில் மொத்தமாக 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில்  47 தொகுதிகளுக்கும் மட்டும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.

முதல்கட்ட தேர்தலில் அசாமில் 26.9 சதவீத வாக்குகளும், மேற்கு வங்காளத்தில் 82 சதவீத வாக்குகளும் போடப்பட்டதாக பதிவாகியுள்ளது. மேற்கு வங்காளத்தில் காங்கிரசுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே நேரடியாக போட்டி ஏற்படும் சூழல் அமைந்துள்ளது. அதன்பின் காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக சேர்ந்து இணைந்து தேர்தலை சந்தித்து வருகின்றனர். தற்போது அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவதால் அந்த ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுவதாக கூறி பாஜக-வினர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலைப் பற்றி, மத்திய உள்துறை மந்திரியும் ,பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்று பேசியுள்ளார். அதாவது பல வருடங்களுக்கு பின்பு எந்தவித வன்முறையும் இன்றி மேற்குவங்காளத்தில் நேற்று தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது. பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்த பெண்கள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தலின் முடிவில் 200க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் ஓங்கும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |