மேற்குவங்க மாநிலம் விஷ்ணு ஊரில் கடந்த மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென இறந்த நிலையில், கொல்கத்தாவிலும் இரு வாரத்தில் 72 நாய்கள் இறந்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் தினமும் 5 முதல் 6 நாய்கள் இறந்த வண்ணம் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் தாக்குதல் காரணமாக நாய்கள் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அது மனிதர்களுக்கு பரவாது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.