பிரதமர் மோடியின் தேர்தல் பேரணிக்காக அதிக பணம் செலவிடப்படுவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார் .
மேலும் இது குறித்து இவர் கூறுகையில், பிரதமரின் பேரணிகளுக்கு முன்பை விட அதிக அளவு செலவு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். அவரது ஒவ்வொரு பேரணிக்கும் ரூ.10 கோடி வரை செலவு செய்யப்படுவதாகவும், நாட்டு மக்களுக்கு பணியாற்றுவதில் இருந்து தேர்தல் ஆணையம் தவறி விட்டதாகவும் தெரிவித்தார்.
இவருடன் செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் கலந்து கொண்டு பேசும்போது மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு வந்திறங்கிய விமானத்தில் ஒரு பெட்டி கொண்டு வரப்பட்டதாகவும், இதுபற்றி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.