திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தான் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது.
திருவள்ளூரில் நேற்று வரை 1,476 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 771 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது 690 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை கொரோனோவால் பாதித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூரில் மேலும் 88 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,564 ஆக அதிகரித்துள்ளது.