Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலி…. அவதிப்படுகிறீர்களா…. உங்களுக்காக டிப்ஸ்…ட்ரை பண்ணுங்க…!!!

மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம்:

மூட்டுவலி என்பது ஒரு வகையை சார்ந்ததல்ல,  மூட்டுக்கு, மூட்டு மாறி, மாறி  வலிக்கும்.  நீங்களே தேர்வு செய்து மருந்து உபயோகிங்கள். முடக்கத்தான் சூப், வாதநாராயணன்  கீரை சூப், அகத்தி  கீரை சூப் என ஏதாவது ஒன்றை தேர்வு செய்து சாப்பிடுங்கள்.

கால்சியம் சத்து குறைவு,  நோய் எதிர்ப்பு தன்மை இல்லாமை, இளம்வயதில் உடற்பயிற்சி செய்யாமை , போன்றவை மூட்டுவலிக்கு காரணம். அசைவ உணவை தவிர்த்து விடுங்கள். அதிகமாக  காய்கறி, பழங்களை, சேர்த்து கொள்ள  வேண்டும்.

கால்சியம் சத்து  நிறைந்த பால் பொருட்களை சாப்பிடுங்கள். உணவில் உப்பை குறைத்து கொள்வது ரொம்ப நல்லது. ஆறி போன புழுங்கல் அரிசி சாதத்தை  உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு கீல்வாதம் மூட்டுவலி உண்டாகும்.

பச்சரிசி சாதத்தினால்  உடல் வலிமை உண்டாகும்.  சிறுநீர் எரிச்சலும், பித்தமும் போகும். இதனுடன் சிறிது நெய் சேர்த்து உண்பது நல்லது. இல்லை என்றால்  உஷ்ணத்தையும் வாயுவையும் உண்டாக்கும்.

காசுக்கட்டியை, தேங்காய் எண்ணெயில் குழைத்து, சேற்று புண்ணுக்கு இடவும் , அல்லது பழைய வெள்ளை துணியை சுட்டு அச்சாம்பலை, தேங்காய் எண்ணெயில் குழைத்து பாதங்களில் உள்ள வெடிப்புகளில் தடவினால் பாத வெடிப்பு குணமாகும்.

மஞ்சள், வசம்பு  5 கிராம்,  இதனுடன்  கைப்பிடி அளவு மருதோன்றி இலை அதனுடன்   தண்ணீர் சேர்த்து மைபோல அரைத்து,  கால் ஆணி உள்ள இடத்தில அடைப்போல கனமாக வைத்து, மேலே ஒரு வெற்றிலையை வைத்து துணியினால் இருக்க கட்டிவிடவும்.

இதனை படுக்க போகும் முன் செய்யவும். மறுநாள் காலையில் அவிழ்த்து  விடவும்.  இது போல் தொடர்ந்து 21 நாட்கள் கட்டி வந்தால் கால் ஆணி மறைந்து விடும்.

மாவிளங்க பட்டையை நீர்விட்டு காய்ச்சி அதில் கரிய போலத்தை சேர்த்து அரைத்து, கை, கால், மூட்டுகளில் பற்று போட்டு வந்தால்,  மூட்டு  வீக்கம் , வலி,  பிடிப்பு குணமாகும் .

உளுந்த பருப்புடன் முடக்கத்தான் கீரையை கூட்டி துவையல் செய்து உண்டால் வாத நோய்கள் தீரும். மூட்டு வலிமை பெறும்.

பருவமடைந்த பெண்கள் மற்றும் வலியுடன் பிரசவமான பெண்களுக்கு, உளுந்துடன் சிறிது பனைவெல்லம் சேர்த்து கஞ்சி அல்லது களி செய்து சூடாக, காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இடுப்பு எலும்பு, உடல் பலன் உண்டாகும். இதை ஆறவைத்தோ இரவிலோ சாப்பிடக்கூடாது. 

Categories

Tech |