Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நம்பியது தப்பா….? மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மூதாட்டியை மயக்கி 6 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் புவனம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். அப்போது விராலி மலை கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் ஊரில் யாருக்காவது சர்க்கரை நோய், குழந்தையின்மை உள்ளிட்ட கோளாறுகள் இருந்தால் தாங்கள் மருந்து கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய மூதாட்டி புவனம்மாள் தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக கூறி அதற்கு மருந்து தருமாறு அந்த வாலிபர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அந்த வாலிபர்கள் மூதாட்டியிடம் மருந்தை கொடுத்து அவரை குடிக்க செய்துள்ளனர். இந்நிலையில் மருந்து குடித்த மூதாட்டி மயக்கமடைந்துள்ளார். அதன்பின் அந்த வாலிபர்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர். மேலும் மயக்கம் தெளிந்தவுடன் எழுந்த மூதாட்டி கழுத்தில் இருந்த நகை காணாமல் போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மூதாட்டி புவனம்மாள் மண்டையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |