மூதாட்டி வீட்டில் 10 1\2 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் பாரதி நகர் பகுதியில் சுடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது மகன், மகள் வெளியூரில் உள்ளனர். இந்நிலையில் குருவம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் குருவம்மாள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு அந்த பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குருவம்மாள் மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு குருவம்மாள் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து குருவம்மாள் வீட்டில் இருந்த பீரோவை பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த 10 1\2 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி தம்ளர் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து குருவம்மாள் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.