Categories
மாநில செய்திகள்

“குரங்கு”… ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விக்கிறவன்….. அநாகரீகமாக பேசிய அண்ணாமலை….. வலுக்கும் கண்டனம்…..!!!!!

கோயம்புத்தூரில் நடந்த கார் வெடி விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பியதோடு தன்னிடம் சில ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கார் விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது எதற்காக? என்ஐஏ அதிகாரிகள் முதலில் விசாரிக்க வேண்டியது அண்ணாமலையிடம்தான் என்று கூறினார்.

அதன் பிறகு தற்போது தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என பாஜக கட்சியின் சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது குறித்து அண்ணாமலையிடம் கேட்டார். அதற்கு அண்ணாமலை பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார்.

அதோடு மரத்தின் மீது குரங்கு தாவுவதை போன்று எதற்காக சுற்றி சுற்றி என்னிடமே வருகிறீர்கள். ஊர்ல இருக்கிற நாய் பேய் சாராயம் விக்ரவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா என்று கோபமாக கூறினார். பின் அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த பேச்சுக்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அதாவது அமைச்சர் செய்தியாளர்களையும் அமைச்சரையும் தரக்குறைவாக பேசியதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை எடுத்து அண்ணாமலை பேசியதற்கு கண்டிப்பாக செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையெனில் அவருக்கு கண்டிப்பாக பாடம் புகட்டுவோம் என ஊடகவியலாளர்கள் மையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அண்ணாமலை ஒருமுறை செய்தியாளர்களிடம் தரக்குறைவாக பேசியுள்ளார். கடந்த மே மாதம் பிரதமர் மோடி தமிழக வந்திருந்தபோது விதிமுறைகளை மீறி பேனர்கள் வைத்திருந்ததை ஆதாரத்துடன் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் கேட்டனர்.

அப்போது 200 இல்லன்னா 500 வாங்கிக்கோ என்று அண்ணாமலை கீழ்த்தரமாக பேசினார். இதனையடுத்து தற்போது மீண்டும் குரங்குகள் என்று செய்தியாளர்களை அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் பண்டிகையின் போது  டாஸ்மாக் வருமானத்தை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில் பாலாஜி கூறி இருந்த நிலையில், அண்ணாமலை அதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |