சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கு இடையே பண பரிமாற்றம் செய்ய மேற்கொண்ட தொழில் நுட்ப பணிகள் முடிவடைந்ததாகவும் விரைவில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் ரிசர்வ் வங்கியும் சிங்கப்பூரின் மத்திய வங்கியும் சேர்ந்து இரண்டு நாடுகளின் UPI மற்றும் pay now போன்ற பண பரிமாற்ற அமைப்புகளை சேர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்கின. தற்போது அந்த திட்டமானது விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது.
இரு நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்ய அந்நாடுகளின் UPI மற்றும் pay now ஆகிய இரண்டு இணையவழி பண பரிமாற்ற அமைப்புகளை சேர்க்க தேவைப்படும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்திருக்கின்றன.
அதன்படி, குறிப்பிட்ட இந்த இரண்டு நாடுகளுக்கிடையே குறைவான செலவில் உடனுக்குடன் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இது, பிற நாடுகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அதிக பயனை தரும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது பற்றி இந்திய உயர் ஆணையராக இருக்கும் பி.குமரன் தெரிவித்ததாவது, Pay Now பண பரிமாற்ற அமைப்பை UPI-யுடன் சேர்க்கும் திட்டமானது இன்னும் சில மாதங்களில் முடிவடையும்.
அதற்குப் பிறகு சிங்கப்பூரில் வசிப்பவர்கள் இந்திய மக்களுடன் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இது பற்றிய அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்படும் என்று கூறி இருக்கிறார்.