Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்ட சோதனை… ஆவணம் இல்லாமல் பிடிபட்ட பணம்… பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கருப்பண்ணசாமி என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது உரிய ஆவணம் இன்றி கருப்பண்ணசாமி கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சிமெண்ட் கடைகளில் வசூல் செய்த பணத்தை தனியார் நிறுவனத்தில் ஒப்படைப்பதற்காக எடுத்துச்சென்ற பணம் என கூறியுள்ளார். ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |