ராணிப்பேட்டை அருகே குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதலில் மாமனாரை கொன்ற மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அலமேலு. இவர் அதே பகுதியில் உறவினர்களால் சீட்டு கம்பெனி ஒன்றில் பணம் போட்டு பின் ஏலத்தில் சீட்டு பணம் போக மீத தொகையை எடுத்துள்ளார். இதை அறிந்த அவரது கணவர் செலவுக்கு பணம் தருமாறு மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதில் தகராறு முற்றவே அவரது வீட்டின் அருகே இருந்த அலமேலுவின் தந்தை வெங்கடேசன் மற்றும் அலமேலுவின் தம்பி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றவே செல்வராஜ்க்கு ஆதரவாக அவரது தம்பி ஆறுமுகச்சாமி பேசினார். இதில் ஆத்திரமடைந்த அலமேலுவின் தந்தை செல்வராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த செல்வராஜ் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாமனார் தலையில் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவரை அழைத்துக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கூடி சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
பின் இதுகுறித்து காவல் நிலையைத்தில் தகவல் அளிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விட்டு கொலை செய்த நெசவு தொழிலாளி செல்வராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி ஆறுமுகச்சாமி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.