ஆர்யாவிற்கு எதிரான பண மோசடி வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா மீது ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் பண மோசடி செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விஜய் சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த புகார் மீதான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தற்போதைய நிலை குறித்து பதிலளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததையடுத்து நீதிமன்றம் இவ்வழக்கை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.