மது அருந்த மனைவி பணம் தராததால் விரக்தியில் கணவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை அடுத்த அயன் வேலூர் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். சுந்தரபாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் அதிகமாக உண்டு அந்த வகையில் தினம்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் சுந்தரபாண்டி. மனைவி மறுக்கவே வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டார் சுந்தரபாண்டி.
இதில் உடல் முழுவதும் கருகி அலறித் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்தவித பலனின்றி பரிதாபமாக சுந்தரபாண்டி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.