Categories
அரசியல்

“ஆவின் நிறுவனத்தில் பண மோசடி”…. அதிமுக மாஜி அமைச்சர் மீதான வழக்கு…. கோர்ட் உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. இவர் மீது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 4 மாதம் ஜாமின் வழங்கியதோடு, வழக்கு பதியப்பட்ட காவல்துறை எல்லையை தாண்டி பயணம் செய்யக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 12-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது ராஜேந்திர பாலாஜி தமிழகம் முழுவதும் பயணம் செய்யலாம் என்றும், கடவு சீட்டை புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும், ஜாமினை 4 மாதங்களுக்கு நீடித்து வழங்குவதாகவும்  நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் பொது வாழ்வில் இருப்பதால் அவருடைய நிபந்தனையை தளர்த்தி மனுவை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

அப்போது தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமல் ஜாமினை தளர்த்தக் கூடாது எனவும், வழக்கை ரத்து செய்யக்கூடாது எனவும், தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். மேலும் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இறுதி விசாரணையை நவம்பர் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Categories

Tech |