Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு” காவல் உதவி எண்ணில் புகார் அளித்த பெண்….. போலீஸ் நடவடிக்கை….!!!

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது பெண் புகார் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவினன்குடி பகுதியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அப்போது எனக்கு வீரமணி என்பவர் அறிமுகமானார். அவர் எனது மகளுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி அவரிடம் 55 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். ஆனாலும் அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டார்.

எனவே மோசடி செய்த வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த புகாரின் படி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வாங்கிய பணத்தை விரைவில் கொடுப்பதாக வீரமணி கூறியுள்ளார். இதனை அடுத்து இரு தரப்பினரும் எழுதிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

Categories

Tech |