Categories
ஆன்மிகம் இந்து

இன்னைக்கு திங்கட்கிழமை…. இந்த மந்திரத்தை சொல்லி சிவனை வணங்குங்க… சகலமும் உங்களை தேடி வரும்…!!

மனிதன் பாவ வினைகளில் இருந்து விடுபட்டு தன் வாழ்வில் மேன்மை அடைய வேண்டுமெனில் சிவ மந்திரத்தை கூறி திங்கட்கிழமை சிவனை வணங்க வேண்டும்.

திங்கட்கிழமை தினத்தன்று சிவனை வழிபடுவதால் நடக்கும் நன்மைகள் ஏராளம். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு ஏற்ப பலனை அனுபவிக்க நேரிடும். இவ்வாறு தீய விளைவுகளை அனுபவிக்கும் போது, மனதார சிவ பெருமானை வணங்கினால் ஒருவனுடைய பாவங்கள் நீங்கி அவனது வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

சிவ மந்திரம்:
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
இந்த மந்திரத்தை கூறி சிவ பெருமானை வணங்கினால் பாவ வினைகளால் ஏற்படும் தடைகளிலிருந்து விடுபட்டு வாழ்வில் சந்தோசம், நிம்மதி, ஆரோக்கியம், மேன்மை போன்றவற்றை அடைய முடியும். எனவே திங்கட்கிழமை தினத்தன்று சிவன் மந்திரங்களை கூறி முழு மனதோடு சிவ பெருமானை வழிபட்டு வந்தால் ஒருவன் தன் பாவ வினைகளில் இருந்து விடுபட்டு தன் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.

Categories

Tech |