சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலா முரளி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ள முதல் காவல் அதிகாரி இவர் ஆவார். இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூத்த மருத்துவர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. மூச்சு திணறல் ஏற்பட்டதால் செயற்கை முறையில் சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரது உயிர் பிரிந்தது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே நேரத்தில் உரியிரழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.