மகனுக்கு தாய் ஒருவர் நாய் குட்டியை பரிசாக கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
வீட்டில் சோபாவில் அமர்ந்து பிஸியாக மொபைல் போனில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவனுக்கு காத்திருக்கும் ஆச்சரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அச்சமயம் அவனது தாய் கையில் ஒரு நாய்க்குட்டி உடன் அறையின் உள்ளே வந்து மகனிடம் காட்டுகின்றார்.
அதனைப் பார்த்த சிறுவன் இன்ப அதிர்ச்சியில் சிலையாய் நிற்கிறான். பின்னர் தனது தாயிடம் நெகிழ்ச்சியையும் செல்லப்பிராணி கிடைத்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியது காணொளியாக சமூக வலைதளங்களில் பரவி பலரையும் நெகிழச் செய்துள்ளது. அதனை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
https://twitter.com/i/status/1308713946728329217